Article about amartya sen biography in tamil

HBD Amartya Sen: ‘திராவிட மாடலை உலகிற்கு சொன்னவர்!’ பொருளாதார அறிஞர் அமர்தியா சென் பிறந்ததினம் இன்று!

தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Amartya Sen: ‘திராவிட மாடலை உலகிற்கு சொன்னவர்!’ பொருளாதார அறிஞர் அமர்தியா சென் பிறந்ததினம் இன்று!

“வறுமை, சமத்துவமின்மை மற்றும் வளர்ச்சி பற்றிய சென்னின் பணி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பஞ்சம் பற்றிய சென்னின் ஆய்வு முக்கிய விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது”

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்தியா சென் (HT_PRINT)

பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக மேம்பாடு போன்ற சிக்கலான பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் தீர்வு காண்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

அவரது ஆய்வு பணிகள் பொருளாதாரத் துறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

அமர்த்தியா சென் நவம்பர் 3ஆம் தேதி 1933ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாந்திநிகேதனில் பிறந்தார்.

Biography martin

அவரது குடும்பம் கல்வி பின்புலம் நிறைந்தது. அவரது தந்தை, அசுதோஷ் சென், வேதியியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியராகவும், அவரது தாயார் அமிதா சென், எழுத்தாளர் மற்றும் அறிஞராகவும் இருந்தார். இது அவரது அறிவுசார் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

உயர்கல்வி

கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் தனது இளங்கலைப் படிப்பை முடித்த சென், தனது பட்ட மேற்படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.

Zachry ty bryan predominant carly matros image

அங்கு, ஜோன் ராபின்சன் மற்றும் பியரோ ஸ்ராஃபா போன்ற குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களால் அவர் வழிகாட்டப்பட்டார், அமர்தியா சென்னின் அறிவுசார் வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். பின்னர் 1988ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் தற்போது லாமண்ட் பல்கலைக்கழக வருகை தருபேராசிரியராக உள்ளார்.

பொருளாதாரத்திற்கான பங்களிப்புகள்

வறுமை, சமத்துவமின்மை மற்றும் வளர்ச்சி பற்றிய சென்னின் பணி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பஞ்சம் பற்றிய சென்னின் ஆய்வு முக்கிய விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. 1981ஆம் ஆண்டு அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் பஞ்சம் என்பது உணவுப்பற்றாக்குறையால் மட்டும் ஏற்படுவதில்லை, மாறாக சமத்துவமின்மை உள்ளிட்ட சமூக காரணிகள் அதில் முக்கியதாக்கம் செலுத்துகின்றது என்பது அவரது வாதம்.

நோபல் பரிசு

அவரது ஆய்வுகளை பாராட்டி 1998ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதனையொட்டி 1999ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது அமர்தியா சென்னுக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தின் ஒப்பீட்டு வளர்ச்சி குறித்த சென் கருத்துகள்

சமூக வளர்ச்சியில் தமிழகத்தின் சாதனைகளை சென். டெவலப்மென்ட் அஸ் ஃப்ரீடம் (1999) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு "ஒப்பீட்டளவில் குறைந்த தனிநபர் வருமானம் இருந்தபோதிலும், சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது" என்று எழுதினார். 

குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகிய துறைகளில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானது என கூறி உள்ளார்.

சமூக சேவைகளில் பொது முதலீட்டுக்கான வலுவான அர்ப்பணிப்பு சமபங்கு மற்றும் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்துதல், நிர்வாகத்திற்கான பரவலாக்கப்பட்ட அணுகுமுறை

துடிப்பான சிவில் சமூகம், ஜனநாயக அரசியல் அமைப்பின் பின்னணியில் தமிழ்நாட்டின் சமூக வளர்ச்சி வெற்றிகள் எட்டப்பட்டுள்ளன என்றும் சென் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான வளர்ச்சிக்கு ஜனநாயகம் அவசியம் என்றும் அமர்தியாசென் கூறி உள்ளார்.